1 கோடியை எட்டவுள்ள கொரோனா!
இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 36,595 கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,571,000 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்தியாவில் நேற்றைய தினம் 540 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என்பதோடு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 139,188 பேர் ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 90 லட்சம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், 2 லட்சத்துக்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை