கொரோனா மரணங்கள் 130 ஆனது!
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது என்று இன்று (04) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
– பிலியந்தலயை சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளார்.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 130 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட 12 பேர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை