இலங்கையில் இன்னும் இரு மாதங்களில் கொரோனா மருந்து!
இன்னும் இரு மாதங்களில் இலங்கையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருமென மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் ஆராய இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் தடுப்பூசி தயாரிப்பு முயற்சி தொடர்பில் அந்த குழுக்கள் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஃபைசர் / பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை இலங்கை போன்ற வெப்பமண்டல நாட்டில் பராமரிக்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர், அந்த தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும் எனவும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குளிர்ந்த காலநிலை நிலைமைகளைக் கொண்ட நாடுகளில், இதைச் செய்யலாம். எனினும் இலங்கையில், இரத்த வங்கி மற்றும் சில பல்கலைக்கழகங்களில் மட்டுமே இதுபோன்ற வசதிகள் உள்ளன.
அத்துடன் வெகுஜன தடுப்பூசிக்கு ஒவ்வொரு சுகாதார பிரிவிலும் இதுபோன்ற ஏற்பாடுகளை நாங்கள் நிறுவ முடியாது. இது நடைமுறைக்கு மாறானது.
இதேவேளை வெற்றிகரமான தடுப்பூசியை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை