பேனா குழாய்கள் மீள்சுழற்சி!


 பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்காக சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

´இது சட்டம் அல்ல ஒழுக்கம்´ என்ற எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் இந்த சுற்றாடல் பாதுகாப்பு சார்ந்த திட்டத்தை நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவன மட்டத்தில் செயற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பாடசாலை அமைப்பின் ஊடாக மாத்திரம் நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் கார்பன் பேனாக் குழாய்களின் எண்ணிக்கை சுமார் 80 கிலோ ஆகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.