கனேடிய நகரம் ஒன்றில் பரவும்பழங்கால நோய்!


 முதல் உலகப்போரின்போது, போர் வீரர்களுக்கிடையே பரவிய நோய் ஒன்று தற்போது கனேடிய நகரம் ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

1915ஆம் ஆண்டு முதல் உலகப்போரின்போது அகழிகளில் மறைந்திருக்கும் போர்வீரர்களுக்கு சீலைப்பேன் என்னும் பூச்சி மூலம் பரவிய நோய் அகழிக்காய்ச்சல்.

அந்த நோய்க்கு பல மில்லியன் போர் வீரர்கள் பலியானார்கள். தற்போது அது Manitobaவில் வீடற்றோர் நான்கு பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Bartonella quintana என்ற கிருமியால் உருவாக்கப்படும் இந்த நோய், சீலைப்பேன்கள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

மீண்டும் மீண்டும் வரும் காய்ச்சல், உடல் வலி, தலை வலி, உடலில் புள்ளிகள் முதலானவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

கனடாவில் இதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த அகழிக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல் உலகப்போரின்போது, போர் வீரர்களுக்கிடையே பரவிய நோய் ஒன்று தற்போது கனேடிய நகரம் ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.