கனடாவில் காணாமல் போயுள்ள 25 வயது தமிழ் இளைஞன்!


 கனடாவில் 25 வயதான தமிழ் இளைஞன் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பிலான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். பொலிசாரின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தான் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி டிலன் நவராஜா என்ற 25 வயது இளைஞன் 6ஆம் திகதி மதியம் 2 மணிக்கு காணாமல் போயுள்ளார்.

அவர் கடைசியாக Keele St & Fourwinds Dr பகுதியில் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராஜா 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார்.

அவரின் தலைமுடி கருப்பு நிறத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராஜா குறித்து தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.