முல்லைத்தீவில் 16 வருடங்களின் பின்னர் தென்பட்ட கிணறு!


 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரையில் இருந்த கிணறு ஒன்று மண்ணில் புதைந்து காணாமல்போனது.

இந்த நிலையில் 16 வருடங்களின் பின்னர் அந்த கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட புரவி புயலின் போது முல்லைத்தீவு கடல் மட்டம் உயர்வடைந்து கடல் எல்லையை மீறிய அலைகள் மீண்டும் கடல்நோக்கி சென்றபோது காணாமல்போன கிணறு தென்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட கடற்கரை வீதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.