திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் மடக்கிப்பிடிப்பு!
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீட்டொன்றில் இன்று (08) அதிகாலை திருட முற்பட்ட இனந்தெரியாத நபர் ஒருவர் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை திருட்டு முயற்சியின் போது மடக்கிப்பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார், அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதோடு மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை