கிழக்கில் 1,058 பேருக்கு தொற்று!


 கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 1,058 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அத்துடன் கல்முனை சுகாதார பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.