ஆனோல்டின் தெரிவை உறுதி செய்தார் சேனாதிராஜா!


 யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

இரண்டு தடவைகள் மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் மாநகர சபை முதல்வர் தனது பதவியை இழந்துள்ளார்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் தெரிவுக்கு யாரை நிறுத்துவது என இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் இன்று (29) யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.