நேரில் சென்று கவலை தெரிவித்த பணிப்பாளர்!
அண்மையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரில் ஒருவரது சடலம் தவறுதலாக உறவினர்களிடம் மாறி கையளிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
இது தொடர்பில் இன்று (09) அறிக்கை வெளியிட்டுள்ள கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளர், இவ்வாறான சம்பவம் நடைபெற்றமை வருந்தத்தக்க விடயம் என தெரிவித்துள்ளார். மேலும்,
“வையகத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் தெய்வத்துள் வைக்கப்படுவார் என்ற தெய்வ வாக்குக்கு இணங்க, மிகக்குறுகிய மானிட வாழ்க்கையில் அவர்தம் அற்புத வாழ்வின் அழகான முற்றுப்புள்ளியாக மரணம் கருதப்படுகிறது.
எனவே துயற்றிருக்கும் குடும்பத்தினரை மேலும் துயருறச்செய்த சம்பவமானது தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக நாமும் துயரில் பங்குகொள்வதோடு ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறோம்” – என்றுள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து தனது இரங்கலையும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை