697 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்!


 30,000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட 95 வது நாடாக இலங்கை நேற்று பதிவானது.

697 புதிய தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை 30,075 ஆக உயர்த்தியது.

இதில், 651 பேர் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். 43 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 26,516 ஆக உயர்ந்துள்ளது.

கனடாவிலிருந்து வந்த இருவர் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்த ஒரு நபர் ஆகிய 3 வெளிநாட்டிலிருந்த வந்தவர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 542 நபர்கள் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,800 ஆக உயர்ந்தது. தற்போது 61 சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 8,131 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

584 நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.