மாகாண சபை தேர்தல் விரைவில்!


 மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு, தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களோடு, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மகிந்த இதனைக் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையின் கீழ் நடத்தி, அடுத்த மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவது இலகுவானதாக இருக்கும் என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், இது தொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Blogger இயக்குவது.