இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து!

 


இலங்கைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை எதிர்வரும் 2021 ஜனவரியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குறித்த போட்டித் தொடர் தொடர்பான அறிவிப்பினையே தற்போது இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 14-18 வரையும், இரண்டாவது போட்டி ஜனவரி 22-26 வரையும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.