வெட்டக்களி குளத்தில் விடப்பட்ட 11 இலட்சம் இறால் குஞ்சுகள்!


 நெடுந்தீவு – வெட்டக்களிக் குளத்தில் சுமார் 460,000 ரூபாய் பெறுமதியான 11 இலட்சத்து ஐம்பதாயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

‘நீர் வளங்கள் உரப் பயன்பாட்டிற்கு வழியமைத்தல்’ எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று (24) குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வெட்டக்களிக் குளத்தினை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான, அண்ணளவாக 15,000 கிலோ கிராம் இறால்களை அறுவடை செய்ய முடியும் என்று துறைசார்ந்தோரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.