நில அதிர்வு; விசாரணைக் குழு !


 கண்டி நகரின் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட் நில அதிர்வு தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நில அதிர்வு தொடர்பான 11 பேர் அடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி நகரின் பல பகுதிகளில் அண்மையில் பதிவு செய்யப்பட்ட நில நடுக்கம் மற்றும் எதிர்காலத்தில் அதன் தாக்கம் என்பன தொடர்பில் நிபுணர் குழுவினால் ஆராயப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர்ந்தும் நிலநடுக்கம் ஏற்படுமிடத்து அதனால் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பது தொடர்பிலும் குறித்த குழுவினரால் விரிவாக ஆராயப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.