கடன் பெறுவதற்கே பாதீடு!
இலங்கை வரலாற்றில் அதிகளவு கடன்தொகையினை பெற்றுக் கொள்வதற்கேற்ப பாதீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு திட்டம் குறித்து நேற்று இரவு ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க இதனை கூறியுள்ளார்.
2021 பாதீடு திட்டம் ஊடாக நாடு பாரிய கடன் சுமையினை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்வாறான ஒரு கடன்சுமையுடன் நாடு எவ்வாறு முன்னோக்கி செல்லும் என்பது கேள்வி குறியான விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்திட்ட மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை