காணிகள் அபகரிப்புக்கு நீதிமன்றை நாடமுடிவு!


 மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்களை இன்று (13) சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்பிகளான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

மூன்று தலைமுறைகளாக தாங்கள் குறித்த பகுதியில் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், தற்போது தங்களை அங்குவரும் பெரும்பான்மையினர் அங்கிருந்து செல்லுமாறு அச்சுறுத்துவதாகவும் மாடு வளர்க்கும் தமது பகுதிகளை உழுது பயிர்செய்வதற்கு முயற்சிப்பதாகவும் பண்ணையாளர்கள் கலந்துலையாடலின் போது குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.