பல பகுதிகள் முடக்கம்!
கொழும்பு, கிரான்பாஸ் சிறிசந்த செவன வீடமைப்பு பகுதி, கிரான்பாஸ் சிறிமுது உயன, மாளிகாவத்தை லஹிரு செவன வீடமைப்பு பகுதி, பொரளை சிறிசர உயன ஆகிய பகுதிகளில் நாளை (14) அதிகாலை முதல் முடக்கநிலை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பின் ஏனைய 17 பகுதிகளில் முடக்கம் தொடர்வதுடன், வெள்ளவத்தை மயூரா ப்ளேஸ் பகுதி நாளை (14) அதிகாலை முதல் முடக்கப்படவுள்ளது.
கம்பஹா – வத்தளை பொலிஸ் பகுதியில், ‘கெரவலப்பிட்டி, ஹெக்கித்த, குருந்துஹேன, எவெரிவத்தை, வெலிகந்தமுல்லை, பேலியகொடை பொலிஸ் பகுதியில் பாத்திய’ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நாளை (14) முடக்கநிலை தளர்த்தப்படவுள்ளது.
அதேவேளை, கம்பஹாவின் ஏனைய 7 பகுதிகளில் முடக்கம் தொடர்வதுடன், ‘வத்தளை பொலிஸ் பகுதியில் நைனாமடு, டூவே வத்த, பேலியகொட பொலிஸ் பகுதியில் ரோஹன விஹார மாவத்தை, கிரிபத்கொட பொலிஸ் பகுதியில் வெடிகந்தை, நிட்டம்புவ பொலிஸ் பகுதியில் திஹரிய வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் வரன ஆலய வீதி, கொத்தொட வீதி, ஹிரிந்த மாவத்த ஆகிய பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளது.
களுத்துறை – வெகனகல் கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள், மரிக்கார் தெரு ஆகிய பகுதிகளும் நாளை முதல் முடக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை