தொழிலாளர் ஓய்வறைக்கு அடிக்கல்!


 நுவரெலியா – கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) இடம்பெற்றது.

கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உப தலைவர், உறுப்பினர்கள், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இதற்கென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நலன் பேணும் வகையில் முதல் நடவடிக்கையாக இந்த ஓய்வு அறை தோட்டப்பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.