மழையால் யாழில் 156 குடும்பங்கள் பாதிப்பு!


 தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 12 மணித்தியாலமாக தொடரும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 83 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுணடாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி பகுதியிலேயே அதிகமான வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.