மட்டக்களப்பு இளைஞன் அவுஸ்திரேலியாவில் தற்கொலை!


 அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த கிசோபன் ரவிச்சந்திரன் (25) என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.

2012ம் ஆண்டு படகு மூலம் அலுஸ்திரேலியா வந்து சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ன் நகரங்களில் வாழ்ந்துவந்த கிசோபன், கடந்த டிசம்பர் 2ம் திகதி பிரிஸ்பேர்னில் வைத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

அவுஸ்திரேலியா வந்த நாள் முதலே பிரிட்ஜிங் (bridging) விசாவில் வாழ்ந்துவந்த கிசோபன், தனது எதிர்காலம் குறித்து மிகவும் அச்சமடைந்திருந்ததாகவும், குடிவரவுத் திணைக்களத்தின் நேர்காணல்களுக்கு முகம்கொடுக்க முடியாத அளவிற்கு தொடர்ச்சியான மன அழுத்தத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களின் உதவியுடன் வாழ்ந்துவந்த கிசோபனுக்கு மனநல உதவிகளை வழங்கும் பொருட்டு தன்னார்வ அமைப்பு ஒன்று அவரைப் பொறுப்பேற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்த நிலையில் அவர் உயிரை மாய்த்துள்ளார்.

கிசோபனின் இறுதிநிகழ்வு நாளை 18ம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.