ரத்ன தேரர் எம்பியானார்!


 எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியலுக்கு யாரை எம்பியாக தெரிவு செய்வது கடந்த 133 நாட்களாக பெரும் சர்ச்சைக்குரிய மோதல் போக்கில் காணப்பட்ட நிலையில் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

இதன்படி அக்கட்சியின் தேசிய பட்டியல் எம்பியாக அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரரை நியமிப்பதா, அத்துரலிய ரத்ன தேரரை நியமிப்பதா அல்லது கட்சியின் தலைவரை, செயலாளரை நியமிப்பதாக என்ற மோதல் நிலைமை குறித்த கட்சிகள் காணப்பட்டது. கட்சியின் அப்போதைய செயலாளர் காணாமல் போயிருந்த குழப்பங்களும் நிகழ்ந்திருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.