இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது!


 இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று (18) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு கோரிக்கை விடுத்த போதும் இதுவரை எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை என வலியுறுத்தியே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் போராட்டத்தை மீனவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் நேற்று பிரோரணை நிறைவேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கெடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.