கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக்க அனுமதி!


 கிளிநொச்சி கல்வி வலயத்தினை இரண்டாக பிரிக்க மாவட்ட அபிவிருத்தி குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. நேற்று (17) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தனி கல்வி வலயமாக இருந்த கிளிநொச்சி கல்வி வலயமானது கரைச்சி, பூநகரி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும் கண்டாவளை -பச்சிலைப்பள்ளி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும் இரண்டாக பிரிக்க நேற்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அதற்கு அமைவாக ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வட.மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில்,

“வலய பிரிப்பு என்பது ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கல்வி அமைச்சரால் இதற்கான விசேட அனுமதி தரப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. ஆகவே, கிளிநொச்சி வலயத்தினை இரண்டாக பிரிப்பதற்கான முன்மொழிவு குறிப்பாக கரைச்சி, பூநகரி பிரதேசத்தை உள்ளடக்கியதாக ஒரு பிரிவையும், கண்டாவளையையும், பளையையும் இணைத்த ஒரு வலயமாக பிரிப்பதற்கான மும்மொழிவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.