நிஷாராவுக்கு எதிராக விசாரணை நடத்த கோரிக்கை!


 மஹர சிறைக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் எண்மர், நீதிமன்றத்தில் தமக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமை தொடர்பாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியும் அரச சட்டவாதியுமான நிஷாரா ஜயரத்னவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொல்லப்பட்ட கைதிகளின் சடலங்கள் தொடர்பான வழக்கு அண்மையில் வத்தளை நீதிமன்றில் நடைபெற்ற போது, பாதிக்கப்ப்ட தரப்பின் சட்டத்தரணிகளை குறிப்பிட்டு இவர்கள் உண்மையில் யாருக்காக ஆஜராகியுள்ளார் என்று கேள்வி எழுப்பியதாக நிஷாரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நிஷாராவின் இந்த செயற்பாடு சட்டத்தரணிகள் பின்பற்றும் நெறிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவித்து இவ்வாறு பிரதம நீதியரசரிடம் நிஷாரா தொடர்பில் விசாரணை நடத்த கோரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.