வவுனியாவில் புலம்பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிப்பு!


 வவுனியாவில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கையில் இருந்து பல்வேறு காரணங்களால் வேறு நாடுகளுக்கு, பலரும் புலம் பெயர்ந்து சென்றுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புலம்பெயர் தினம் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்நிலையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை, சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்திற்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் விசேட வழிபாடுகளை நடத்தியிருந்தார்.

Blogger இயக்குவது.