யாழில் இன்று நால்வருக்கு தொற்று!
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (18) இதுவரை 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையில் இவ்வாறு சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியானது!
மாலை,
யாழ்ப்பாணம் மருத்துவப்பீட ஆய்வுக்கூட சோதனையின் போது உடுவிலை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதியானது.
காலை,
திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 16ம் திகதி திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 312 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மேற்கொள்ளுவதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டது.
குறித்த பரிசோதனையின் போதே திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்து என அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை