தீவக படகுச் சேவை குறித்து கலந்துரையாடல்!


 ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுவரும் படகுச் சேவைகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (19) நடைபெற்றுள்ளது.

துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர், நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு கிராமங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது, ஊர்காவற்றுடையில் அடுத்தவாரம் திறக்கப்படவுள்ள படகுச் சீரமைப்பு மையத்தின் செயற்பாடுகள், தீவுகளுக்கான படகுச் சேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்.மாவட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது படகுப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற படகுகள் தரச் சான்றிதழ் பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும் படகுப் போக்குவரத்துக்குகளை முழுமையாக வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்க வேண்டும் என்றும் வடக்கு ஆளுநர் தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் தீவக மக்கள் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.