அண்டார்டிகாவிலும் கொரோனா


அண்டார்டிகாவில் உள்ள இரண்டு இராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 8 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த புது வைரஸ் 70% அதிவேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடைசியாக இதுவரை கொரோனா எட்டிப்பார்க்காத துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் ராணுவ முகாம் வைத்துள்ள பிற நாடுகள் இதுவரை கொரோனா வைரஸ் குறித்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.