தகனத் தடைக்கு உள்ளான சடலத்தை தகனம் செய்ய பணிப்பு!


 கொரோனா தொற்றால் இறந்த சேய்க் அப்துல் காதர் என்பவரின் சடலத்தை நீதிமன்றுக்கு தெரியப்படுத்திய பின்னர் தகனம் செய்யுமாறு, காலி பொலிஸாருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு வழங்கியுள்ளார்.

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் வரை கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள கொரோனா தொற்றால் இறந்த சேய்க் அப்துல் காதரின் சடலத்தை தகனம் செய்யாது வைத்திருக்க வேண்டுமென காலி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சடலங்கள் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.