மின்சாரக் கம்பியில் சிக்கிய குரங்கு சாவு!


 மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலத்திற்கு முன்பாகவுள்ள மின்சார கம்பியில் சிக்குண்டு குரங்கு குட்டி ஒன்று உயிழந்துள்ள சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பிரதேசத்தில் சில மாதங்களாக குரங்குகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் காணப்படும் பயன்தரும் மரங்கள் மற்றும் வீட்டு கூரைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் மழை ஓய்ந்துள்ளதால் குரங்குகளின் வருகை மீண்டும் தொடங்கிய நிலையிலேயே இன்றைய தினம் குறித்த குரங்கு குட்டி மரத்தில் இருந்து பாயும் போது மின்சார கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.

Blogger இயக்குவது.