மனைவியை காணவில்லை: கணவன் முறைப்பாடு!
உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா – வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி கடந்த 13ம் திகதி மாலை அவரது தாயாரின் வீட்டிலிருந்து உறவுக்காரர்களிடம் சென்றுவருவதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். குறித்த நேரத்தில் நான் உறங்கிக் கொண்டிருந்தமையால் அவர்கள் சென்றதை அறிந்திருக்கவில்லை.
எனினும் நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராதமையினால் அவர் சென்றதாக தெரிவிக்கப்படும் உறவினர் வீடுகளில் சென்று பார்த்த போது அவர் அங்கு வரவில்லை என தெரிவித்தனர். அவரது தொலைபேசியும் இயங்கவில்லை. இந்நிலையில் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை