கொரோனா தொற்றுடைய வவுனியா பெண் பலி!


 வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண்மணி இன்றைய தினம் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அனுராதபுரம் மித்சிறி செவன் வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார்.

Blogger இயக்குவது.