அரசியலமைப்பு உருவான பிறகே தேர்தல்!
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் நிறைவடையும் வரை மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை குறிப்பிட்டார். மேலும்,
“மாகாண சபை முறைமை தொடர்பான புதிய சட்டங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற கருத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஒன்பது வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு விதிமுறைகளை செயற்படுத்த முடியாது.
எனவே மாகாண சபை முறையை அரசாங்கம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். ஆகவே நடைமுறையில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வரை மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை