10 பகுதிகள் இன்று முடக்கப்பட்டன!


 இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் கொடகவெல மற்றும் எஹலியகொட ஆகிய பகுதிகளில் சில இடங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொடகவெல பிரதேச சபைக்குட்பட்ட இறக்குவானை நகர், இறக்குவானை வடக்கு, இறக்குவானை தெற்கு, மசுமுல்ல, கொட்டலை ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எஹலியகொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மின்னான, விலேகொட, யகுதாகொட, அஷ்காகுல்ல வடக்கு, போபத்த ஆகிய பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று நோயாளிகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.