புதுக்குடியிருப்பு தொற்றாளியின் வைரஸ் வீரியம் மிக்கது!


 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடல்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அசிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண கொரோனா நிலைமை குறித்து இன்று (27) யாழில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே வைத்தியர் கேதீஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.