மாநகர சபை ஊழியர்கள் போராட்டம்!


 விரல்ரேகை (பிங்கர்பிறிண்ட்) இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர்செய்ய வேண்டும் என்று தெரிவித்து ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபாய் கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மாநகர சபை ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2013ம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட குறித்த இயந்திரம் அண்மையிலேயே பொருத்தப்பட்டதாகவும் அது தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், அதனை திருத்துவதற்காக 300 ஊழியர்களிடம் தலா 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த இயந்திரத்தினை அனைத்து ஊழியர்களும் பயன்படுத்துவதால் கொரோனா பரவும் அபாயம் காணப்படுவதாக பல தடவைகள் தெரிவித்தும் நிர்வாகத்தினர் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.