சடலத் தகனத்தை எதிர்த்து தந்தை, மகன் போராட்டம்!


 முஸ்லிம்களின் சடல எரிப்புக்கு எதிராக கல்முனையில் தந்தையும் மகனும் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

கல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை கால்நடையாகச் சென்று தமது அமைதி வழி போராட்டத்தினை இவர்கள் முன்னெடுத்தனர்.

இதன்போது கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று குறித்த தந்தை மற்றும் மகனால் கையளிக்கப்பட்டு நடைபாதை ஆரம்பிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.