குடித்து கும்மாளம் அடித்த இருவருக்கு கொரோனா!
காலியி போபெ போதல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள உக்வத்த பகுதியில் நடந்த இறுதி சடங்கில் கலந்து கொண்ட மூன்று பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
இறுதிச் சடங்கு இந்த மாதம் 11 முதல் 13 வரை நடைபெற்றுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கொழும்பிலிருந்து ஒரு வங்கி ஊழியர் வந்துள்ளார். கொழும்பிலிருந்து வந்த நபர் நோய்த்தொற்று அடைந்ததைக் கண்டுபிடித்த பிறகு, இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று (27) காலை பெறப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட வங்கி ஊழியருடன் இறுதிச் சடங்கின் போது மது அருந்தியவர்களில் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் காலி மாவட்ட செயலகத்தில் கணக்காளராக பணிபுரிகிறார்.
கருத்துகள் இல்லை