நேற்று மட்டும் 674 கொரோனா தொற்றாளர்கள்!


 நாட்டில் நேற்று 674 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டவர். இதன்மூலம், அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,054 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 614 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்தும் 54 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொாரோன கொத்தணியில் 37,360 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய தலா இருவர் மற்றும் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மூன்று வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 8,166 பேர் தற்போது 65 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, 650 பேர் குணமடைந்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,701 ஆக உயர்ந்துள்ளது.

497 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்

Blogger இயக்குவது.