பொலிஸ் பிடியில் இருந்த சந்தேக நபர் சுட்டுக்கொலை!


 கம்பஹா – வெயாங்கொடயில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று (28) காலை பொலிஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவரை வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிஷாந்த குமாரசிறி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.

வெயாங்கொட பகுதிக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற போதே பொலிஸாரை தாக்கி தப்ப முயன்றுள்ளார். இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்தே பொலிஸார் இவரை சுட்டுக் கொன்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.