மீண்டும் ஆனோல்டே – கூட்டமைப்பு விடாப்பிடி!


 யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்கு மீண்டும் ஆனோல்டை நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இருப்பினும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு யாரை பிரேரிப்பது என்பது தொடர்பில் நேற்றைய (27) கூட்டத்தில் உறுதி செய்யப்படவில்லை.

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை மேயர் மற்றும் தவிசாளர் தெரிவுகள் எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களான கலந்துரையாடல் கடந்த 26ம் திகதி தமிழரசு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதன்போது யாழ் மாநகர சபையின் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாரை நிறுத்த வேண்டும் என்பதை ஏனைய கட்சிகள் தீர்மானிக்க முடியாது எனவும் ஆனோல்டை மீள களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தமக்கு தரவேண்டும் என ரெலோ கோரியது. இது தொடர்பில் நாளை மறுதினம் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.