மூவாயிரம் கைதிகள் குணமடைந்தனர்!


 நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை 3,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 3,229 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர்களில் 112 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு சிறைச்சாலையில் இதுவரை கொரோனா தொற்று உறுதியாகிய 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.