கனிய வள மண் அகழ்வை எதிர்த்து போராட்டம்!


 மன்னாரில் அவுஸ்திரேலியா நாட்டினை தளமாக கொண்ட நிறுவனமொன்று கனியவள மண் அகழ்விற்கான ஆய்வினை முடித்து, தற்போது மண் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த கனிய வள மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அமைப்பும் இணைந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (28) காலை 11 மணியளவில் குறித்த கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்த கண்டன போராட்டத்தில் சர்வ மத தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.