கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு!


 பதுளை – மடுல்சீமை, பகினிலந்தை பகுதியில் பெற்றோரால் உணவு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ஒருமுறை இந்த குழந்தையை அவரது தாயார் காட்டில் கைவிட்டதாகவும், அது தொடர்பில் அவருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் விசாரைணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் தாயார், இந்த குழந்தைக்கு இரண்டரை வயது இருக்கும் போது, மறுமணம் செய்ததுடன், குழந்தையை கைவிட்டதாகவும், குழந்தையின் தந்தை பல்வேறு மறுமணங்களை செய்தார் என்றும், மனைவிகள் அனைவரும் கருத்து முரண்பாட்டால் அவரையும் அவரது குழந்தையையும் கைவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட குழந்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நன்னடத்தை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.