கொரோனா தொற்று எண்ணிக்கை 30,000!


 இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது.

இலங்கையில் 798 கொரோனா தொற்றாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதிகளவிலான தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக கொவிட் 2ஆவது அலையினால் அதிகம் மேல் மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 526ற்கும் அதிகமான தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 12,604 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று 97ற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் மொத்தமாக 7019 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட 53 தொற்றாளர்களுடன், கொவிட் 2ஆவது அலையில் 1589 பேர் அந்த மாவட்டத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் நேற்று 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 883 பேர் கொவிட் 2ஆவது அலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

மேலும், இலங்கையில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

7 ஆயிரத்து 978 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது..

இதன்படி குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.