‘தமிழ் குழந்தைகள் பயங்கரவாதிகளா?’
வவுனியாவில் சுழற்சி முறையில் 1,412வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தருமாறுக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கரிசனை கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் உறவுகள் முன்வைத்தனர்.
‘கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?, தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை