காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!


 காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நல்லூர் நல்லை ஆதினம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“இதன்போது “எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா? மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

காணாமல் போன உறவுகளைத் தேடி எத்தனையோ தாய் தந்தையர் உறவுகள் உயிரிழந்திருக்கின்ற நிலையிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு ஒருவர் ஒருவராக சாவதை விட எங்களை ஒட்டு மொத்தமாக கொன்று விடுங்கள்.”

இவ்வாறு பல்வேறு கோஷங்களை எழுப்பிய உறவுகள் கதறியழுதனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.