பாம்பு தீண்டி 4 வயது குழந்தை மரணம்!

 


மட்டக்களப்பு – கட்டுமுறிவு குளத்தில் வசிக்கும் ரவீந்திரன் கிருஸ்டிக்கா (வயது-4) என்ற குழந்தை, விஷப்பாம்பு கடித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகள் அற்ற ஒரு குடிசை வீட்டில் குறித்த குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை வேளையில் விஷப்பாம்பு குழந்தையை கடித்துள்ளதை பெற்றோர் அறிந்த நிலையில், 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கதிரவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர் தெரிவித்தனர்.

கட்டுமுறிவு குளம் கிராமமானது மிகவும் பின்தங்கியதாக மாவட்டத்தின் எல்லைப் புறத்தில் உள்ளது. அங்குள்ள மருத்துவ சிகிச்சை நிலையம், எந்தவிதமான மருத்துவ உதவியும் கொடுக்க முடியாத நிலைமையில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.